2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

சாவகச்சேரியில் கை வைத்த நிலாவெளி வாசி கைது

Editorial   / 2017 ஓகஸ்ட் 22 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

 

சாவகச்சேரி நகரப் பகுதியில், மோட்டார் சைக்கிள் மற்றும் அலைபேசியைத் திருடிய நபர் ஒருவரை, இன்று (22) கைது செய்துள்ளதாக, சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.  

திருகோணமலை - நிலாவெளி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். 

சாவகச்சேரி நகரப் பகுதியில் நேற்று (21) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிள் மற்றும் 15 ஆயிரம் ரூபாய் பெறுமதியான அலைபேசி என்பன கொள்ளையடிக்கப்பட்டன.  

இது தொடர்பில், பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், பிரதேசத்தில் பொருத்தியிருந்த சி.சி.டி.வி கமெராக்களின் உதவியுடன், சந்தேகநபரை கைதுசெய்துள்ளனர்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X