Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ரொமேஷ் மதுஷங்க / 2018 மார்ச் 13 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம்- சாவகச்சேரி பகுதியிலிருந்து முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு சொந்தமானதென கருதப்படும் சீருடையும், வெடிப்பொருட்களும் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீர்குழாய் ஒன்றை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பணியாளர்களுக்கு குறித்த பொருட்கள் கிடைத்துள்ளதாகவும், இதனையடுத்து, அவர்கள் இதுதொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து, குறித்த இடத்தில் பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது, விடுதலைப்புலிகளின் சீருடையின் மேல் பகுதி ஒன்றும்,2 வெடிப்பொருட்களும் மீட்கப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .