Janu / 2024 மே 30 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
கணவருடன் மருத்துவ சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு சென்று, வீடு திரும்பிக்கொண்டிருந்த குடும்ப பெண் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பு பகுதியில் புதன்கிழமை (29) இடம்பெற்றுள்ளது.
பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த 61 வயதுடைய சரோஜினி தேவி அல்பேர்ட் வில்லியம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
குறித்த பெண் கடந்த சில நாட்களாக சுகவீனமடைந்திருந்த நிலையில் மருத்துவ சிகிச்சைபெற அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொண்டு , கணவனுடன் துவிச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது , பின்னால் வேகமாக வந்த கார் இவர்களை மோதி தள்ளியுள்ளது.
இதன்போது குறித்த பெண் தூக்கி வீசப்பட்டு , படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த இளவாலை பொலிஸார் காரின் சாரதியை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
எம். றொசாந்த்
17 minute ago
28 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
28 minute ago
51 minute ago