2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சிகிச்சை பலனின்றி மூதாட்டி உயிரிழப்பு

Editorial   / 2018 ஒக்டோபர் 02 , பி.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
- செந்தூரன் பிரதீபன்
 
கடந்த மாதம் 29ஆம் இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூதாட்டியொருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். 
கெருடாவில் சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் சிவலாம்பிகை வயது (81) என்ற ஆறு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரழந்தவர் ஆவார்.  
கடந்த 29ம் திகதி இந்த மூதாட்டி வீட்டிருக்கு அருகில் உள்ள கோயில் ஒன்றுக்கு சென்று விட்டு நடந்து வந்து கொண்டிருந்துள்ளார். இதன்போது இந்த மூதாட்டி நடந்து பக்கம் வந்த மோட்டார் சைக்கிள் மோதி தள்ளியுள்ளது. 
தலையில் பலத்த காயமடைந்தவரை வீதியால் சென்றவர்கள் காப்பாற்றி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பித்திருந்தனர். பின்னர் அங்கிருந்து இரவு 8 மணிக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றலாகி சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் மூதாட்டி இன்று உயிரழிந்துள்ளார். இறப்பு விசாரணைகளை வைத்தியசாலையின் திடீர் இறப்பு அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X