Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 பெப்ரவரி 07 , பி.ப. 03:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
புத்தூர் கிழக்கு பகுதியில், உடன்பிறந்த சகோதரிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இரண்டுசகோதரர்களை பெப்ரவரி 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மல்லாகம் நீதிமன்ற நீதிவான்ஏ.அலெக்ஸ்ராஜா, இன்று (07) உத்தரவிட்டுள்ளார்.
தனது சகோதரர்களால், தான் துன்புறுத்தப்பட்டதுடன், உறவுமுறையிலான பெரியம்மாவின் மகன் மற்றும்அவனது நண்பரும் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, பாதிக்கப்பட்ட சிறுமி தாமாகவே முன்வந்துஅச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக, பொலிஸ் வட்டாரத் தகவல்கள்தெரிவிக்கின்றன.
அதாவது, 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில், குறித்த சிறுமியை, அவரது மூத்த சகோதரன் பாலியல் ரீதியாகதுன்புறுத்தியுள்ளார்.
இதனை சிறுமி தாய்க்கு கூறியதை அடுத்து, தாயார் அண்ணை கண்டித்துவிட்டு, சிறுமிக்கு மாத்திரை ஒன்றைவாங்கி கொடுத்துள்ளார்.
இதையடுத்து, இந்த விடயம் இரண்டாவது சகோதரனுக்கு தெரியவர அவரும் சகோதரியை பாலியல் ரீதியாகதுன்புறுத்தியுள்ளார்.
பின்னர், பெரியம்மாவின் மகனும், அவனுடைய நண்பனும் தன்னை தற்போது தொடர்ச்சியாக துன்புறுத்தியதாக, சிறுமி தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, இன்று (07) இரண்டு சகோதரர்களையும் தயாரையும், அச்சுவேலி பொலிஸார் கைதுசெய்தனர்.
கைதுசெய்யப்பட்ட மூவரையும் மல்லாகம் நீதிமன்ற நீதிவான் ஏ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில்ஆஜர்படுத்தியபோது இரண்டு சகோதரர்களையும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான்உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், சிறுமியின் தாய் 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் மேலதிக இரண்டு சந்தேகநபர்களையும் கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும், பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .