Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Janu / 2024 பெப்ரவரி 20 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை கடத்தி சென்று , தனது வீட்டில் தங்க வைத்திருந்த 17 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தொல்புரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காணவில்லை என வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , அப்பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் ஒருவனின் வீட்டில் சிறுமி தங்க வைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் , வீட்டிற்கு விரைந்து , சிறுமியை மீட்டுள்ளதுடன் , சிறுவனை கைது செய்துள்ளனர்
மேலும் பொலிஸாரால் , குறித்த சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட சிறுவனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
எம்.றொசாந்த்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago