2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

சிறுமி துஸ்பிரயோகம் : முதியவர் கைது

Editorial   / 2018 மே 31 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.என்.நிபோஜன், சுப்பிரமணியம் பாஸ்கரன்

12 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை தொடர்பில் 65 வயதுடைய முதியவர் ஒருவர் மாங்குளம் பொலிஸாரால் இன்று (31) கைது செய்யப்பட்டுள்ளார்.

முறிகண்டி பிள்ளையார் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில், இவ்வாறு குறித்த சிறுமி ஒருவரை தொடர்ச்சியாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய 65 வயதுடைய முதியவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தமையை அவதானித்த அப்பகுதி வர்த்தகர்கள் நேற்று (30) வீடியோ ஆதாரத்துடன் கிராம சேவையாளர் ஊடாக பிரதேச செயலருக்கு தகவல் வழங்கியுள்ளனர். பிரதேச செயலர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து குறித்த முதியவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சிறுமி வறிய குடும்பத்தை சேர்ந்தவர் எனவும், வறுமையை சாதகமாக பயன்படுத்தி குறித்த சம்பவம் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்துள்ளது எனவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை முறிகண்டியில் உள்ள பல வர்த்தக நிலையங்களில் சிறுவர்கள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், குறித்த செயற்பாட்டை தடுத்து நிறுத்துவதுக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் பலமுறை சிறுவர் பாதுகாப்பு தரப்பினருக்கு எடுத்து கூறியுள்ள போதிலும், பெற்றோருக்கு துணையாக வர்த்தக நடவடிக்கையில் சிறுவர்கள் ஈடுபட்டு வருகின்றமையை தடுத்து நிறுத்த முடியாத நிலை தொடர்ந்தும் காணப்படுவதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .