2025 மே 09, வெள்ளிக்கிழமை

‘சிறுவர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டிப்போம்’

Editorial   / 2020 செப்டெம்பர் 30 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன், டி.விஜித்தா

சர்வதேச சிறுவர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்கவுள்ளதாக, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தால், வவுனியா  பழைய பஸ் நிலையத்துக்கு முன்னால், இன்று (30) காலை ஆர்ப்பட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, ஊடகங்களுக்குக் கருத்துரைத்த போதே, அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர்கள், “ஜனநாயக ரீதியான தமது போராட்டங்களுக்கு அரசாங்கத்தால், பல்வேறு அழுத்தங்களும் அச்சுறுத்தல்களும் பிரயோகிக்கப்படுவதால், போராட்டத்தில் கலந்துகொள்ளும் பொதுமக்களின் எண்ணிக்கை குறைவாகக் காணப்படுகிறது” என்றனர்.

எனவே, தமக்கான  நீதி கிடைக்கும் வரையில், இந்தப் போராட்டங்களை இடைநிறுத்தாமல் தொடர்ந்து முன்னெடுப்போமெனவும், அவர்கள் கூறினர்.

இதேவேளை, சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, தமிழர் தாயத்தில் மாபெரும் எழுச்சிப் பேரணியொன்றை முன்னெடுக்கப்படவுள்ள அதேவேளை, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மகஜரொன்றும் கையளிக்கவுள்ளதாக, வடக்கு - கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவுகளின் அமைப்பினர், இன்று (30) தெரிவித்தனர்.

காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் உறவுகளுக்கான நீதி வேண்டி, நாளை (01)  காலை 10 மணிக்கு, யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பேரணி ஆரம்பமாகி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு காரியாலயத்தின் முன்பாக நிறைவு செய்யப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X