Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 பெப்ரவரி 26 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன், எம். றொசாந்த், டி.விஜித்தா, மு.தமிழ்ச்செல்வன், எஸ்.என்.நிபோஜன், எஸ்.றொசேரியன் லெம்பேட், சுப்பிரமணியம் பாஸ்கரன், சண்முகம்தவசீலன்
அதிபர், ஆசிரியர்களுக்கான சம்பள முரண்பாட்டுக்குத் தீர்வு வழங்கக் கோரி, நாடளாவிய ரீதியில் அனைத்து ஆசிரியர்களும் அதிபர்களும் இணைந்து, இன்று (26) முன்னெடுக்கப்பட்ட சுகவீன விடுமுறைப் போராட்டத்துக்கு, வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்களும் அதிபர்களும் ஆதரவுத் தெரிவித்து, கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம்:
யாழ்ப்பாணம்
இதற்கமைய, யாழ். மாவட்ட ஆசிரியர்களும் அதிபர்களும், யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்கு முன்னால், கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிளிநொச்சி
இதேவேளை, கிளிநாச்சி மாவட்ட ஆசிரிய சேவைச் சங்கத்தால், கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ஆசிரியர் சேவைச் சங்கத்தினர், தமது கோரிக்கைக்கு அமைச்சர் ஆதரவானக் கருத்துகளைத் தெரிவித்தாரெனவும் தங்களுக்குத் தீர்வு கிடைக்கும் வகையில் அமைச்சர் தனது முயற்சிகளை விரைவாக முன்னெடுக்க வேண்டுமெனவும் கூறினர்.
மன்னார், முல்லைத்தீவு
மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளின் ஆசிரியர்கள், அதிபர்களும் சுகவீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்களின் வருகை, பாடசாலைகளின் நிலைமை:
யாழ்ப்பாணம்
இதனால், யாழில் உள்ள பாடசாலைகளில், மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
யாழில் உள்ள பெருமபாலான பாடசாலைகளில், நேற்றைய தினம் மாணவர்களின் வரவு மிகக் குறைந்தளவில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி
இந்தப் போராட்டத்தில், கிளிநொச்சியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் உள்ள 90 வீதத்துக்கும் அதிகமான அதிபர், ஆசிரியர்கள் கலந்துகொண்டதாக, கிளிநொச்சி மாவட்ட ஆசிரியர சேவைச் சங்கச் செயலாளர் கிருபாகரன் தெரிவித்தார்.
அத்துடன், இந்தப் போராட்டம் காரணமாக, பாடசாலையில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் முழுமையாக பாதிக்கப்பட்ட அதேவேளை, பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் வருகை தராமையால் மாணவர்களும் வருகை தரவில்லை.
இதனால் பாடசாலைகள் முழுவதும் வெறிச்சோடிக் காணப்பட்டன.
மன்னார்
இந்தப் போராட்டம் காரணமாக, அதிகளவான பாடசாலைகளுக்கு, மாணவர்கள் முற்று முழுதாகச் சமூகமளிக்கவில்லை.
சில பாடசாலைகளுக்கு மாணவர்கள் சென்றதோடு, ஆரம்பப் பிரிவு மாணவர்களை அழைத்துச் சென்ற பெற்றோரும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாவட்டப் பாடசாலைகளில், வழமையாக வருவதை போன்றே மாணவர்களின் வருகை காணப்பட்டது.
இருப்பினும், ஆசிரியர்களின் வருக்கையின்மை காரணமாக, கற்றல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.
சில பாடசாலைகளில், மாணவர்கள், ஆசிரியர்களின் வருகையின்மை காரணமாக, உடனடியாகவே மாணவர்கள் திரும்பிச் சென்ற அதேவேளை, சில பாடசாலைகளில், குறிப்பிட்ட சில மணியத்தியாலங்களின் பின்னர் மாணவர்கள் திரும்பிச் சென்றனர்.
7 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago