2025 மே 21, புதன்கிழமை

சுகாதார அமைச்சர் ராஜித யாழ்ப்பாணத்துக்கு விஜயம்

Editorial   / 2018 ஓகஸ்ட் 16 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன், டி.விஜிதா

சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, யாழ்ப்பாணத்துக்கு இன்று (16) விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார்.

இதற்கமைய, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள அரச மருதாக்கள் கூட்டுத்தாபனத்தின் புதிய விற்பனைக் கிளையை, அமைச்சர் திறந்துவைத்தார்.

அதைத்தொடர்ந்து, புனர்வாழ்வு நிலையத்துக்கான புதியக் கட்டட நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்த அமைச்சர், பின்னர் வைத்தியசாலையின் நோயாளர் விடுதியையும் பார்வையிட்டார்.

அத்துடன், தாதியர் விடுதியைத் திறந்துவைத்த அமைச்சர், தாதியர் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வுகளில், சுகாதரப் பிரதியமைச்சர், வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, விஜயகலா மகேஸ்வரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களான சயந்தன், சிவாஜிலிங்கம் ஆகியோரும் கலந்துகொண்டனர்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .