Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 டிசெம்பர் 01 , பி.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊடகவியலாளர்கள் மீது தாக்குதலை மேற்கொண்ட இராணுவத்தினர் கைதுசெய்யப்பட்டு, தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டமை வெறுமனே கண்துடைப்பு சம்பவமாகவே நாம் காண்கிறோம் என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஊடகங்களுக்கு அவர் அனுப்பிவைத்துள்ள அறிக்கையில், “முள்ளிவாய்க்கால் பகுதியில் கடந்த 27ஆம் திகதி செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வசந்திரன், இராணுவத்தினரால் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்ட சம்பவம் கண்டனத்துக்குரியது. இது மிகவும் கீழ்தரமானதும் ஆகும்.
“முள்ளிவாய்க்கால் பகுதியில் தனது பணியை செய்துகொண்டிருந்த வேளை அடையாளத்தை உறுதிப்படுத்துமாறு இராணுவத்தினர் கேட்டுக்கொண்டதையடுத்து, தனது அடையாள அட்டையை காண்பிக்க முற்பட்டவேளையே அவர் தாக்கப்பட்டதாக அறிகிறோம்.
“இந்தத் தாக்குதலை மேற்கொண்ட இராணுவத்தினர் கைதுசெய்யப்பட்டு, பின்பு பிணையில் விடுவிக்கப்பட்டதும் வெறுமனே கண்துடைப்பு சம்பவமாகவே நாம் காண்கிறோம்.
“இது தொடர்பாக சுயாதீனமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு நியாயம் கிடைக்க வழிமுறைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதை உரிய அதிகாரிகள் மற்றும் அரசிடம் நாம் கேட்டுக்கொள்கிறோம்.
“இவ்வாறான சம்பவங்கள் ஊடகத்துறைக்கு பெரும் சவாலாக அமைகின்றன. இவ்விடயங்கள் குறித்து நாம் தொடர்ந்தும் அவதானமாக இருந்து, பாதிக்கப்படுவோருக்காக எப்போதும் குரல்கொடுப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
2 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago