Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 ஜூன் 28 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ். நிதர்சன்
செம்மலை- நீராவியடி ஏற்றம் பிள்ளையார் ஆலயத்தில் எங்களுடைய உரித்தை நிலைநாட்டும் வகையில் எதிர்வரும் 6ம் திகதி பாரிய பொங்கல் விழாவை நடத்தபோவதாக வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் து. ரவிகரன் தெரிவித்தார்.
மேற்படி விடயம் தொடர்பாக நேற்று யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் அவர் தெரிவிக்கையில்,
செம்மலை - நீராவியடி ஏற்ற பிள்ளையார் ஆலயம்; மிக நீண்டகாலமாக தமிழ் மக்களால் வழிபடப்பட்ட ஆலயம். பின்னர் போர் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் அந்த பிள்ளையார் ஆலயத்தில் இராணுவத்தினர் முகாம் ஒன்றை அமைத்துக் கொண்டதுடன், அங்கு சிறிய புத்தர் சிலையையும் வைத்தனர்.
பின்னர் இராணுவத்தினர் உதவியுடன் அங்கு பௌத்த பிக்கு ஒருவரும் வந்து தங்கிய நிலையில், சிறிது சிறிதாக பிள்ளையார் ஆலயம் ஆக்கிரமிக்கப்பட்டு விகாரை கட்டப்பட ஆரம்பித்தது.
இதனையடுத்து பிள்ளையார் ஆலய நிர்வாகம் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்த நிலையில் இரு தரப்பினரும் ஒற்றுமையாக தமது வழிபாடுகளை நடத்தலாம். என நீதிமன்றம் கட்டளை வழங்கியது.
ஆனாலும் அங்குள்ள பௌத்த பிக்கு வெளி மாவட்டங்களிலிருந்து சிங்கள மக்களை அழைத்துவந்து தமிழ் மக்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவதும், அச்சுறுத்தும் பாணியில் நடந்து கொள்வதுமாக பல பிரச்சினைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
எங்களுடைய பூர்வீகமான மண்ணில், எங்களுடைய வழிபாட்டு தலத்தில் எங்களுடைய உரிமையை நிலைநாட்டுவதற்காக எதிர்வரும் 6ம் திகதி பாரிய பொங்கல் விழா ஒன்றை பிள்ளையார் ஆலய நிர்வாகத்தில் உள்ள இளைஞர்களும், பொதுமக்களும் இணைந்து ஒழுங்கமைத்திருக்கின்றார்கள்.
இந்த பொங்கல் விழாவுக்காக சிங்கள மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, சில அடிவருடிகளால் சிங்கள மக்களுக்கு தாரைவார்த்து கொடுக்கப்பட்ட தமிழர்களின் பூர்வீக கிராமமான கோட்டைகேணி பிள்ளையார் ஆலயத்திலிருந்து மட்ப்பண்டங்கள் எடுத்துவரப்பட்டு பூசை வழிபாடுகளும், பொங்கல் விழாவும் இடம்பெறும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago