2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

’சேதனப் பசளைக்கான கேள்வி அதிகரிப்பு’

Niroshini   / 2021 ஒக்டோபர் 20 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

யாழ்ப்பாணம் மாநகர சபையின் மீள்சுழற்சி மையத்தில் உருவாக்கப்படும் சேதனப் பசளைக்கான  கேள்வி அதிகரித்துள்ளதாக, யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் ரி.ஜெயசீலன் தெரிவித்தார்


யாழ்ப்பாணம் மாநகர சபையின் சேதனப் பசளை உற்பத்தி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், சேதனப் பசளை உற்பத்தி என்பது, யாழ்ப்பாணம் மாநகர சபையின் மீள்  சுழற்சி  தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்றார்.

மிகவும் அண்மைக் காலமாக, சேதனை பசளைக்கு கேள்வி அதிகமாகக் காணப்படுவதன் காரணமாக  சேதனப் பசளை உற்பத்தியை தாம்  அதிகரித்துள்ளதாகவும், அவர் கூறினார்.


அண்மைய காலங்களில், மாதத்துக்கு 25 ஆயிரம்  தொடக்கம் 30 ஆயிரம் கிலோகிராம் வரை, சேதனப் பசளை உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவித்த அவர், 'வீரியம்' என்ற பெயரில், யாழ்ப்பாணம் மாநகர சபைக்குச் சொந்தமான மீள்சுழற்சி மையத்தில், சேதன பசளை  உற்பத்தி செய்யப்பட்டு, ஒரு கிலோகிராம் 20 ரூபாய் விலையில் விற்கப்படுகிறது எனவும் கூறினார்.

'தற்போது பெருந்தொகையானோர் இந்த எமது  சேதனப் பசளையை விவசாயிகள் மற்றும் ஏனைய பொதுமக்கள் ஆர்வத்துடன் பெற்றுக் கொள்கின்றார்கள். ஆர்வமுள்ளவர்கள் மாநகர சபை மீள்சுழற்சி மையத்தில் உருவாக்கப்படும் சேதனப் பசளையை மீள்சுழற்சி மையத்திலும் மற்றும் ஏனைய திரட்டு அலுவலங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும்' எனவும், அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .