Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஓகஸ்ட் 22 , பி.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
ஹேரோய்ன் வாங்குவதற்கு சைக்கிள்களைத் திருடி விற்பனை செய்து வந்த நபர் ஒருவரை, இன்று (22) கைது செய்துள்ளதாக, யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் புறநகர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, திருடி விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் 31 சைக்கிள்களையும் பொலிஸார் கைப்பற்றி, பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.
குறித்த நபர், யாழ் நகரப்பகுதிகளில் தரித்துவிடப்படும் சைக்கிள்களை லாவகமான முறையில் திருடி வந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில், அதிகளவான முறைப்பாடுகள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தன.
சைக்கிள்கள் திருடப்பட்டிருந்த இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கமெராவின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சந்தேக நபரை யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வைத்து கைது செய்தனர்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago