2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

சோதனை சாவடிக்கு அருகில் விபத்து

Niroshini   / 2021 மே 31 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையின் எழுதுமட்டுவாழ் பகுதியில் உள்ள சோதனை சாவடிக்கு அருகில், இன்று (31) காலை இடம்பெற்ற விபத்தில், 8 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த சோதனை சாவடிக்கு அருகில் கன்ரர் ரக வாகனமொன்று, சடுதியாக நிறுத்த முற்பட்ட வேளையில், அந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது. இதன்போது, அதில் பயணித்த 8 பேரும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, குறித்த சோதனை சாவடியை இரவு நேரங்களில் அடையாளப்படுத்தும் முகமான மின்குமிழ்கள் ஒளிர விடப்படல் போன்றவை உரியமுறையில் செய்யப்படவில்லை என பல தரப்பினராலும் குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றன.


இதற்கு முன்னரும் இது போன்று, குறித்த சோதனை சாவடியுடன் வாகனங்கள் மோதி விபத்துகள் இடம்பெற்ற பின்னரும் பொலிஸார் உரிய நடவடிக்கைள் எடுக்காது, அசமந்தமாகச் செயற்படுவது குறித்தும் பலரும் விசனம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .