2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

சாட்சியை அச்சுறுத்தியவர்களுக்கு விளக்கமறியல்

Niroshini   / 2016 ஜூன் 07 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கொன்றின் சாட்சியை அச்சுறுத்திய, கிளிநொச்சி நகரிலுள்ள கிராம அபிவிருத்திச் சங்கம் ஒன்றின் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோரை நாளை புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற ஏ.ஏ.ஆனந்தராஜா திங்கட்கிழமை (06) உத்தரவிட்டார்.

பெண் ஒருவரை ஏமாற்றி, பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு கடந்த மே மாதம் 25ஆம் திகதி நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்குடன் தொடர்புடையவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 2 சந்தேகநபர்கள் மற்றும் பிணையில் விடுவிக்கப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் என நான்கு சந்தேகநபர்கள் இதன்போது, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

மன்றுக்குச் சமூகமளித்த பாதிக்கப்பட்ட பெண், தனது கிராமத்தின், கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோர் இந்த வழக்கை வாபஸ் பெறுமாறு அச்சுறுத்தியதாக தனது சட்டத்தரணியூடாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

இதனை கவனத்தில்கொண்ட நீதவான், உடனடியாக அந்த மூவரையும் கைது செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டதைடுத்து, கடந்த மே மாதம் 26ஆம் திகதி மூவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (06) விளக்கமறியலில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

கொலை அச்சுறுத்தல் என்ற ரீதியில், பொலிஸாரின் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டமையால், நீதிமன்றத்தில் பொலிஸாரின் குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்படவில்லை. இதனால் மூவரையும் நாளை புதன்கிழமை (08) வரை விளக்கமறியலில் வைக்கமாறு நீதவான் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X