2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

சொந்த ஊருக்குச் சென்ற அந்தோனியார்

George   / 2016 ஜூன் 23 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன் 

யாழ்ப்பாணம், பலாலி வடக்கு, அன்டனிபுரம் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து சென்ற அந்தோனியார் சிலை, மீண்டும் நேற்று புதன்கிழமையன்று (22) அதேயிடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.  

யுத்தம் காரணமாக, கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதியன்று பலாலி வடக்கிலிருந்து மக்கள், இடம்பெயர்ந்து சென்றனர். இதன்போது, அங்கிருந்த அந்தோனியாரையும் தங்களுடன் எடுத்துச்சென்றனர்.

அதன் பின்னர், பலாலி வடக்கை  உயர்பாதுகாப்பு வலயமாக அறிவித்த பாதுகாப்பு தரப்பினர், இராணுவத்தினர் வசம் வைத்திருந்தனர். இடம்பெயர்ந்த மக்கள், அதன் பின்னர் தாங்கள் வசித்த பருத்தித்துறையில் அந்தோனியாரைப் பிரதிஷ்டை செய்தே வழிபட்டு வந்தனர். 

இந்நிலையில், அண்மையில் பலாலி வடக்கு பிரதேசம் விடுவிக்கப்பட்டு, மக்கள் தற்போது அங்கு மீளக்குடியேறி வருகின்றனர். இதனால், பருத்தித்துறையிலிருந்த அந்தோனியாரை, பவனியாக நேற்று பலாலி வடக்குக்கு கொண்டுசென்ற அப்பிரதேச மக்கள், அங்கு அவரை பிரதிஷ்டை செய்தனர். இதனை அச்சுவேலி பங்குத்தந்தை ஏ.ஜே.ஜெயராசா தலைமை தாங்கி நடத்தினார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X