2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

சீமெந்துத் தூண்களை சேதமாக்கிய விசமிகள்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 27 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்
வளலாய் மேற்குப் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் வளவினைச் சுற்றிப் போடப்பட்டிருந்த 44 சீமெந்துத் தூண்களை, இனந்தெரியாதோர் சிலர் சேதமாக்கியுள்ளதாக, அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால், வீட்டு உரிமையாளரினால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (26) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டுக்குக் குடிசெல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையிலேயே, வீட்டு வளவைச் சுற்றி நாட்டப்பட்டிருந்த மேற்படி சீமெந்துத் தூண்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன என்று, பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் அச்சுவேலி பொலிஸார், சந்தேகநபர்களைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X