2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

சிறுப்பிட்டி மோதல் சம்பவம்: மேலும் மூவருக்கு விளக்கமறியல்

Niroshini   / 2016 ஜூன் 05 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சிறுப்பிட்டி தெற்கு பகுதியில் கடந்த 31ஆம் திகதி இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவரை 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் மாவட்ட பதில் நீதவான் என்.தம்பிமுத்து, சனிக்கிழமை (04) உத்தரவிட்டார்.

இச்சம்பவத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உட்பட ஐவர் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பார்வையிட்ட நீதவான், எதிர்வரும் 07ஆம் திகதி வரை சிறைச்சாலை அதிகாரிகள் ஊடாக விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இந் நிலையில், தொடர் விசாரணைகளை மேற்கொண்டிருந்த அச்சுவேலி பொலிஸார், மோதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட 17வயது சிறுவன் மற்றும் பெண் உட்பட மேலும் நால்வரை சனிக்கிழமை (04) கைது செய்திருந்தனர்.

அவர்களை பதில் நீதவானின் வாசஸ்தலத்தில் முற்படுத்திய போது,  அவர்களில் பெண்னை 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான  பிணையில் விடுவித்த பதில் நீதவான், ஏனைய மூவரையும் 7ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X