Thipaan / 2015 செப்டெம்பர் 05 , மு.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
சாவகச்சேரி பகுதியில் இருந்து உடுவில் பகுதியில் உள்ள உறவினரின் வீட்டில் தங்கி நின்ற 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த சிறுமியின் சித்தப்பாவினை 25 ஆயிரம் ரூபாய் ஆட்பிணையுடன் கூடிய 10,000 ரூபாய் காசுப்பிணையில் செல்ல மல்லாகம் மாவட்ட நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், வெள்ளிக்கிழமை (04) அனுமதியளித்தார்.
அத்துடன் அடுத்த வழக்கு தவணையினை ஒக்டோபர் 16ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார். கடந்த மாதம் 28ஆம் திகதி சாவகச்சேரியில் இருந்து உடுவில் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயாருடன் வந்து தங்கியுள்ளனர்.
மறுநாள் சிறுமியினை உறவினர் ஒருவருடன் தங்க வைத்து விட்டு தனது மாதந்த வைத்திய சிகிச்சைக்கு தாய் சென்றுள்ளார்.
இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சந்தேக நபரான சித்தப்பா, சிறுமிக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
சும்பவம் தொடர்பில் சிறுமியின் தாயார் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபரான சிறுமியின் சித்தப்பாவினை கைது செய்திருந்தனர்.
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago