Gavitha / 2015 ஒக்டோபர் 01 , பி.ப. 01:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்ப்பாணத்தில் வித்தியாவுக்கு எதிரான அநீதி முதல் கொடதெனியாவ சேயா வரையிலான, துயரமாக கொடூரச் சம்பவங்கள் சிறுவர் மீது திணக்கப்பட்ட அடக்குமுறை, பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் சமூக ரீதியான ஏனைய பாதிப்புக்கள் காரணமாக முழு நாடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதாக சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் வியாழக்கிழமை (01) நடைபெற்ற சர்வதேச சிறுவர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சிறுவர்களுக்கும் பெண்களுக்கும் எதிராக இடம்பெறுகின்ற வன்முறைகள் மிகவும் கவலைக்கிடமாகவுள்ளது. 30 வருட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், பல்வேறு துன்பங்களை எதிர்நோக்கியுள்ளனர். அவர்களுக்கு இவ்வாறான சம்பவங்கள் மேலும் அதிர்ச்சியளிப்பதாகவுள்ளது.
சிறுவர், பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் துஸ்பிரயோகச் சம்பவங்கள் தொடர்பில், நாடாளுமன்றத்தில் சட்ட சீர் திருத்தங்களை நிறைவேற்ற வேண்டியுள்ளது. இவ்வாறான வன்முறைகளை தடுப்பதற்கு எமது அமைச்சும், அரசாங்கமும் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதற்கு அனைவரும் பேதங்களை மறந்து ஒன்றுபடவேண்டும்.
சமூகத்தில் பாரிய சிந்தனை மாற்றத்தை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு குடும்பங்களிலும் பெற்றோர்கள் மற்றும் கல்வி நிலையங்கள், மத அமைப்புக்கள், ஊடகங்கள், தொண்டர் அமைப்புக்கள் என அவரவர் மட்;டங்களில் தங்களால் இயன்ற கடமைகளை, பொறுப்புக்களை முறையாக நிறைவேற்ற வேண்டும். அப்படியான நிலைமையில் மட்டுமே எமது எதிர்காலச் சந்ததியினரின் வளமான வாழ்வினையும் பாதுகாப்பையும் உறுதிசெய்ய முடியும் என்றார்.
16 minute ago
24 minute ago
26 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
24 minute ago
26 minute ago
28 minute ago