Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஓகஸ்ட் 21 , மு.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
சுவாசக்குழாயில் உணவுப்பதார்த்தம் சிக்கியதால் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் வியாழக்கிழமை (18) உயிரிழந்துள்ளார் என யாழ் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவத்தில் கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த ஜயக்கோன் உதயகுமார் (வயது 38) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
18ஆம் திகதி மதிய உணவு உண்டபின், குறித்த நபர் நித்திரைக்குச் சென்றுள்ளார். மாலை ஆறு மணி ஆகியும் கணவர் நித்திரையிலிருந்து எழும்பாததன் காரணத்தினால், மனைவி அவரை தட்டியெழுப்பியுள்ளார். எழும்பாதிருந்த கணவனை யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டுச் சென்ற போது, அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சட்டவைத்திய அதிகாரியின் உடற் கூற்று பரிசோதனையின் போது, உயிரிழந்த நபரின் சுவாசக்குழாயில் உணவுப்பதார்த்தம் சிக்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.
11 minute ago
28 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
28 minute ago
49 minute ago