2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

சி.வி.யை நீக்குவது தொடர்பில் நான் நடுநிலைவாதி

Princiya Dixci   / 2015 நவம்பர் 09 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

வடமாகாண அமைச்சர்களை மாற்றுதல் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரை நீக்குதல் ஆகிய விடயங்கள் தற்போது அதிகமாகப் பேசப்பட்டு வருகின்றன. இந்த இரண்டு விடயங்களிலும் நான் தலையீட்டை மேற்கொள்ளாமல் நடுநிலையாகச் செயற்படுவேன் என வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தமிழ்மிரருக்குத் தெரிவித்தார்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை நீக்குமாறு கட்சியிடம் கோரியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அவுஸ்திரேலியாவில் வைத்துக் கூறியுள்ளமை மற்றும் வடமாகாண அமைச்சர்களை மாற்றுமாறு உறுப்பினர்கள் சிலர் கோரியுள்ளமை தொடர்பில் அவைத்தலைவரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

அவர் தொடர்ந்து கூறுகையில்,

'வட மாகாண முதலமைச்சரை நீக்குமாறு கோரும் விடயத்தில் நான் அவருக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ செயற்படமாட்டேன். அது கட்சியின் நிலைப்பாடு. அமைச்சரவையை மாற்ற வேண்டும் என சுமார் 20 பேர் கொண்ட உறுப்பினர்கள் கலந்துரையாடியதாக ஊடகங்களில் செய்திகள் வாயிலாக அறிந்தேன். அந்த விடயத்தில் நான் நடைபெறும் விடயங்களை அவதானிப்பனாக இருப்பேனே தவிர, சரி பிழை தொடர்பில் கருத்துத்தெரிவிக்க மாட்டேன். இதுவே எனது பதவிக்குரிய நிலைப்பாடு ஆகும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .