2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

’ஜனநாயகத்தை கட்டியெழுப்புவதற்கு இலஞ்ச ஊழலை இல்லாதொழிக்க வேண்டும்’

Editorial   / 2019 செப்டெம்பர் 13 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனநாயகத்தையும் பேண்தகு இலங்கையையும் கட்டியெழுப்புவதற்கு இலஞ்ச ஊழலை முதலில் இல்லாதொழிக்க வேண்டுமென்று வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.

அத்துடன், அரசாங்க ஊழியர்களும் பொதுமக்களும் இது தொடர்பில் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளார். 

இலஞ்ச ஊழலினை வடமாகாணத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டுமென்ற ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், எண்ணக்கருவிற்கு அமைய இலஞ்ச ஊழல் தொடர்பிலும் அவற்றை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பவை தொடர்பில் பொதுமக்களுக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கும் அறிவூட்டும் செயலமர்வு, இன்று (13) முற்பகல் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான சரத்துகளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தச் செயலமர்வில், டிஜிட்டல் தொடர்பாடலின் மூலம் ஆளுநர் உரையாற்றினார்.

இலஞ்ச ஊழலில் ஈடுபடும் அதிகாரிகள் தமது செல்வாக்கால் தப்பிப்பதுடன் சாதாரண கடை நிலை ஊழியர்கள் தண்டிக்கப்படும் நிலைமையே பெரும்பான்மையாக நம்நாட்டில் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய ஆளுநர், இலஞ்சம் மற்றும் ஊழல்களில் ஈடுபடும் உயரதிகாரிகளும் தண்டிக்கப்பட வேண்டுமென்றும் அப்போதுதான் இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியுமென்றும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .