Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Gavitha / 2015 செப்டெம்பர் 24 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
குணசேகரன் சுரேன்
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக, வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், புதன்கிழமை (23) ஜெனீவாவுக்கு பயணமானார்.
வடமாகாண சபையில் விடுமுறை பெற்றுக்கொண்டு, வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பளிஹக்காரவின் அனுமதியுடன் இவர் ஜெனீவாவுக்கு சென்றுள்ளார்.
'இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும்' மற்றும் 'இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றது இனஅழிப்பு' என்று, வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டு வடமாகாண முதலமைச்சரால் கையொப்பமிடப்பட்ட இரண்டு பிரேரணைகளில் பிரதிகளையும், அனந்தி எடுத்துச் சென்றுள்ளார்.
அந்த பிரதிகளை, ஐ.நா உறுப்பு நாடுகளிடம் கையளிப்பதற்காகவே அவர் எடுத்தச்சென்றுள்ளதாக தெரியவருகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
6 minute ago
13 minute ago