2025 மே 20, செவ்வாய்க்கிழமை

டெங்கு பரவும் சூழலை வைத்திருந்த ஐவருக்கு பிணை

எம். றொசாந்த்   / 2018 ஒக்டோபர் 09 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழில். டெங்கு பரவும் சூழலை வைத்திருந்த குற்றசாட்டில் வைத்திய அத்தியட்சகர் உள்ளிட்ட ஐவருக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் கடுமையான எச்சரிக்கையுடன் நேற்று (08) பிணை வழங்கியுள்ளது.

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை வளாகத்தில் கட்டட நிர்மாண பணிகள் இடம்பெற்று வரும் பகுதியில், டெங்கு நுளம்பு பரவும் சூழல் காணபடுவதை அவதானித்த பொதுச்சுகாதார பரிசோதகர், அதனை சீர் செய்யுமாறு மருத்துவ அத்தியட்சகருக்கு இரண்டு வார கால அவகாசம் கொடுத்திருந்தார்.

அந்நிலையில் இரண்டு வார கால அவகாசம் முடிவடைந்த போதிலும் அவை சீர் செய்யப்படாமையால் மருத்துவ அத்தியட்சகர், அங்கு கட்டடப்பணியில் ஈடுபட்டு வரும் ஒப்பந்தக்கார்கள் மூவர் மற்றும் அருகில் இருந்த உணவக உரிமையாளர் ஆகிய ஐவருக்கும் எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் பொதுசுகாதார பரிசோதகர் வழக்கு தாக்கல் செய்தார்.

குறித்த வழக்கினை விசாரித்த மல்லாகம் நீதிவான் எதிர்வரும் 14 நாட்களுக்குள் அப்பகுதிகள் சீர் செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டு, கடுமையாக எச்சரித்த பின்னர் ஐவரையும் தலா 1 இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல அனுமதித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X