Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 16 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.விஜிதா
மேன்முறையீட்டு நீதிமன்ற கட்டளையின் முட்டுக்கட்டைகளை நீக்கி, டெனிஸ்வரன் அமைச்சராக பதவி வகிக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து, மாகாண சபையை சுமூகமாக இயங்க ஆவண செய்ய வேண்டுமென, வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா வேண்டுகோள் விடுத்தார்.
வடக்கு மாகாண சபையின் 127 ஆவது அமர்வு, விசேட அமர்வாக, கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில், இன்று (16) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு வேண்டுகோள்விடுத்தார்.
இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர்,
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்மானத்தின் படி, எந்தவொரு மாகாண முதலமைச்சரும், தமது அமைச்சர் குழாமின் அமைச்சர் ஒருவரை நியமிக்கவோ, பதவியிறக்கவோ முடியாது என்று கருத்து வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இவ்வாறு முதலமைச்சர் கூறியிருப்பது, உண்மையைத் திரிபுபடுத்திக் கூறியிருக்கும் செயலாகுமெனவும் குறிப்பிட்டார்.
அரசமைப்பின் பிரகாரம், மாகாணத்துக்கென அமைக்கப்பட்ட மாகாண சபையின் உறுப்பினர்களிலிருந்து ஏனைய அமைச்சர்களை ஆளுநர் நியமிக்க வேண்டுமெனக் குறிப்பிட்ட அவர், அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் மட்டும்தான் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, அமைச்சர்களை நீக்கும் அதிகாரம் குறிப்பிடப்படவில்லையெனவும் தெரிவித்தார்.
இந்த வழக்கின் தீர்ப்பு வந்ததிலிருந்து, மாகாண சபையின் நிறைவேற்றுச் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்த நிலையில் இருப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், யார் அமைச்சர்கள், யார் நிறைவேற்றுத் துறைக்குப் பொறுப்பானவர்கள் என்ற தெளிவற்ற நிலை, மாகாண சபையின் செயற்பாடுகளை மந்தகதிக்கு இட்டுச் சென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஏற்கெனவே நொண்டிக்குதிரை போல் மாகாண சபையின் செயற்பாடுகள் வினைத்திறனற்றவையாக இருந்து வருகின்ற நிலையில், இவ்வாறான நிகழ்வுகள் முடமாக்கப்பட்ட குதிரையைப் போல மாகாண சபை மாறிக் கொண்டிருப்பதாக, அவர் மேலும் கூறினார்.
40 minute ago
51 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
51 minute ago
2 hours ago
2 hours ago