2025 ஜூலை 19, சனிக்கிழமை

தகனம் செய்யப்படும் சடலங்களுக்கான கட்டணங்களில் மாற்றம்

Niroshini   / 2021 செப்டெம்பர் 29 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். தில்லைநாதன்

யாழ்ப்பாணம் மாநகர சபை ஆளுகைக்குட்பட்ட கோம்பயன் மணல் மின் தகன மயானத்தில் தகனம் செய்யப்படும் சடலங்களுக்கான கட்டணங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு, நேற்று  (28), மாநகர சபை மேயர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, எதிர்வரும் 1ஆம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில், மின் தகன கட்டணத்தில் மாற்றம் செய்வதற்கு, சபை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, 12 வயதுக்கு குறைந்த கொரோனா தொற்றாளர்களின் சடலங்களுக்கு 4,000 ரூபாயும் ஏனைய கொரோனா தொற்றாளர்களின் சடலங்களுக்கு 8,000 ரூபாயும் அறவிடப்படுவதென, தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொரோனா தொற்று அல்லாத சடலங்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் அறவிடப்படுவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X