2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

தங்கூசி வலையுடன் உள்ளுர் மீனவர்கள் 11 பேர் கைது

George   / 2016 ஜூன் 16 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளைப் பாவித்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் வேலணைப் கடற்பரப்பில் வைத்து 11 மீனவர்கள் புதன்கிழமை (15) இரவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் பா.றமேஸ்கண்ணா தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் குருநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்களிடமிருந்து 3 தொகுதி தங்கூசி வலைகள் மீட்கப்பட்டதாக உதவிப் பணிப்பாளர் கூறினார்.

மூன்று நாட்டுப்படகுகளில் தங்கூசி வலைகளைப் பயன்படுத்தி இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, ரோந்துப் பணியில் ஈடுபட்ட கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X