Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2020 ஜூலை 23 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
“தடுப்பு காவல் என்பது சிறுவர்களை பூட்டி வைப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அவர்கள் சிறுவயதில் குடும்ப சூழ்நிலை, அகச்சூழல், புறச்சூழல், உடலில் ஏற்படும் மாற்றங்களால் தவறைப் புரிகின்றார்கள். இவர்கள் தாங்கள் உண்மையில் தவறு இழைக்கின்றோம் என செய்வதில்லை” என, வடக்கு மாகாண ஆளுநர் திருமதி. பி. எஸ். எம். சார்ள்ஸ் தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தில் காணப்படும் ஒரேயொரு சான்றுபெற்ற நன்னடத்தை பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்ட தடுப்பு காவல் இல்லத்தை, இன்று திறந்துவைத்து உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்துக்கு குறித்தொகுக்கப்பட்ட நிதியின் கீழ் இந்தப் பாடசாலையில் இந்தக் கட்டடம் 3 மாடிகளில் அனைத்து வசதிகளும் உள்ளடங்களாகக் கட்டப்பட்டுள்ளது.
சிற்றம்பலம் புவனேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்துரைத்த அவர், வடக்கு, கிழக்கு ஆகிய மாகாணங்களில் காணப்படும் ஒரே ஒரு பாடசாலையாக அச்சுவேலி - செல்வநாயகபுரம் பகுதியில் அமைந்துள்ள இந்தப் பாடசாலையின் தடுப்பு காவல் இல்லம் என்பது, 12 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்கள் குற்றங்கள் புரிந்து அவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் தடுத்து வைக்கப்படுவதுடன், அவர்கள் நீதிமன்ற நடவடிக்கை நிறைவு பெறும் வரை இங்கேயே தடுத்து வைக்கப்படுகிறார்களென்றார்.
“தடுப்பு காவல் என்பது சிறுவர்களைப் பூட்டி வைப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அவர்கள் சிறுவயதில் குடும்ப சூழ்நிலை, அகச்சூழல், புறச்சூழல், உடலில் ஏற்படும் மாற்றங்களால் தவறைப் புரிகின்றார்கள். இவர்கள் தாங்கள் உண்மையில் தவறு இழைக்கின்றோம் என செய்வதில்லை.
“அவர்களால் தங்களுக்கு தெரியாமலே இந்த தவறைப் புரிகின்றார்கள். இவர்களின் மனநிலைக்கு ஏற்ப அவர்களுக்கான ஆலோசனைகள், கல்வி என்பன புகட்டப்பட வேண்டும்.
“மாறாக அவர்களை ஆடு, மாடுகள் போல் இங்குள்ள சிறைகளில் பூட்டி வைப்பது என்பது, அவர்கள் நாளைக்கு மிகவும் தீவிரமான செயற்பாடு, மற்றும் குற்றச்செயல்களை மீண்டும் செய்யத்தூண்டும் அளவுக்கு இருக்கக்கூடாது. அதற்கான பொறிமுறைகள் வகுக்கப்படும்” எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
8 hours ago
9 hours ago