2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

தடை நீக்கத் தீர்ப்பு சொல்வது என்ன?

Yuganthini   / 2017 ஜூலை 27 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு, ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றத்தால் நேற்று  (26) வழங்கப்பட்ட தீர்ப்பு, தமிழ் மக்கள் மீதான அபிமானத்தால் நீக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

குறித்த தீர்ப்பின் போது குறிப்பிட்ட நீதிமன்றம், 2009ஆம் ஆண்டு இராணுவ ரீதியாக விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், அவர்களால் ஐரோப்பாவில் தாக்குதல் நடத்தப்படும் என்பதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பிப்பதற்கு, ஐரோப்பிய ஒன்றியம் தவறிவிட்டது என்றே குறிப்பிட்டனர்.

இந்தத் தீர்ப்புக் காரணமாக, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உட்பட்ட நாடுகளில், தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதிகள் முடக்கி வைக்கப்பட்ட நிலையில், அவை விடுவிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால், இந்தத் தீர்ப்பு, விடுதலைப் புலிகள், இராணுவ ரீதியாகத் தோற்கடிப்பட்ட பின்னர், அவர்களால் ஆபத்து இல்லை என்ற அடிப்படையில் வழங்கப்பட்டதே தவிர, தமிழ் மக்களின் அரசியல் போராட்டம் சம்பந்தப்பட்டு வழங்கப்பட்ட தீர்ப்புக் கிடையாது.
இந்தப் பட்டியலில் 2006ஆம் ஆண்டு, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புச் சேர்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X