2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

தடுப்பணைகளை அமைத்துத் தருமாறு கோரிக்கை

Princiya Dixci   / 2017 மார்ச் 22 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

யாழ். நெடுந்தீவின் வடக்கு கரையோரப்பகுதிகள், மிக வேகமாக கடலரிப்புக்கு உள்ளாகி வருவதாகவும், காளவாய்முனையில் இருந்து மாவிலித்துறை பிடாரியம்மன் தடுப்பணைகளை அமைத்துத் தருமாறு, இக்கரையோர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெடுந்தீவு வடக்குப் பகுதியின் மாவிலித்துறைக்கு அருகிலுள்ள பிடாரியம்மன் கோவில் முதல் காளவாய்முனை வரையான பகுதியிலுள்ள கரையோரப்பகுதிகள், தினமும் கடலரிப்புக்குள்ளாகி வருகின்றது.

இவ்வாறு கடலரிப்புக் காரணமாக, கரையோரத்தில் இருந்த பல வீடுகள் சேதமடைந்துள்ளன.

எனவே, இப்பகுதியில் கடலரிப்பைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு அணைகள் அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

எற்கனவே இந்தக் கோரிக்கையை முன்வைத்த நிலையில், கடலரிப்பைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு அணை அமைப்பதற்கென, 16 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டு, குறித்த வேலைகள் மேற்கொள்ளப்படாமல் குறித்த நிதி, ஒப்பந்தக்காரர்கள் இன்மையால் திரும்பிச் சென்றுள்ளது எனவும், 1990ஆம் ஆண்டு முதல் தற்போது மிக வேகமாக கடலரிப்பு இடம்பெற்று வருகின்றது எனவும் நெடுந்தீவு கடற்தொழிலாளர்கள் கூட்டுறவுச்சங்கங்களின் சமாசத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X