Princiya Dixci / 2021 ஜூன் 18 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
நாவற்குழியில் ரயில் பாதையில் இருந்த தண்டவாள பொருத்துக் கிளிப்புகளை திருடிய மற்றும் வாங்கி குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் தண்டவாளத்தில் பொருத்துக் கிளிப்புகள், கடந்த 14ஆம் திகதி திருடப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் பொலிஸார், திருடப்பட்ட தண்டவாளக் கிளிப்புகளை கொள்வனவு செய்து உடமையில் வைத்திருந்த 48 வயதுடைய ஒருவரைக் கைது செய்தனர்.
அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் அரியாலையைச் சேர்ந்த 24 வயதுக்குட்பட்ட நால்வர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago