2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

தனிமைப்படுத்தப்பட்ட 76 பேரும் விடுவிப்பு

Editorial   / 2020 ஜூலை 31 , பி.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்

கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 76 பேரும் தற்போது விடுவிக்கப்பட்டு உள்ளனரென, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 7ஆம் விடுதியில் சிகிச்சை பெற்ற ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்த விடுதியில் சிகிச்சை பெற்ற 76 நோயாளிகள் சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டனர்.

இதனடிப்படையில், வடக்கு மாகாணம் மற்றும் வெளி மாகாணங்களைச் சேர்ந்த சுமார் 76  பேர் அவர்களது வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர். அவ்வாறு சுய தனிமைப்படுத்தப்பட்டவர்களில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 63 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேரும் வவுனியாவைச் சேர்ந்த 2 பேரும் புத்தளம், பொலநறுவை, குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த தலா ஒவ்வருவருமாக 76 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட நபர் கொழும்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு கடந்த இரண்டு நாள்களாக மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என உறுதியாகியுள்ளது.

இதையடுத்து, அவர் வைத்தியசாலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதனால் தொற்று நோய் தடுப்பு பிரிவினருடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்ட 76 போரும் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .