2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

தனிமையில் வாழ்ந்த மூதாட்டி, சடலமாக மீட்பு

Editorial   / 2018 பெப்ரவரி 19 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன், டி.விஜிதா

தனிமையில் வாழ்ந்த மூதாட்டி, சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

மானிப்பாய் கட்டுடைப் பகுதியைச் சேர்ந்த த.இரத்தினதேவி (வயது 74) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த மூதாட்டி தனிமையில் வசித்து வந்துள்ளார். கடந்த 3 நாட்களாக மூதாட்டியின் நடமாட்டத்தை காணாத அயலவர்கள், இன்று (19) காலை மூதாட்டியைத் தேடி, அவரது வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

அதன்போது, மூதாட்டியின் சடலம் வீட்டினுள் காணப்பட்டுள்ளது. அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதேவேளை, மூதாட்டியின் வீட்டுக் கூரை ஓடுகள் கழற்றப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும், அதனால் கூரையினூடாக வீட்டினுள் உட்புகுந்த கொள்ளையர்கள் மூதாட்டியை கொலை செய்து விட்டு, கொள்ளையடித்துச் சென்றிருக்கலாம் எனவும் அயலவர்கள் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .