2025 மே 02, வெள்ளிக்கிழமை

தனிமையில் வாழ்ந்த மூதாட்டி வன்புணர்வின் பின் கொலை

Freelancer   / 2022 ஜூன் 26 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

என். ராஜ்

காங்கேசன்துறை - கொல்லங்கலட்டியில் வீட்டில் தனிமையில் வாழ்ந்த மூதாட்டி கொடுமையாக வன்புணர்வுக்கு உற்படுத்திய பின், கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெள்ளிக்கிழமை காலைசாணை தவமணி (வயது-78) என்ற குறித்த மூதாட்டி கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.

இதையடுத்து, மூதாட்டியின் சடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதில், மூதாட்டி கொடுமையாக வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின் கொலை செய்யப்பட்டுள்ளார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் தொடர்பில் ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்றும் பொலிஸார் கூறினர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .