2025 மே 10, சனிக்கிழமை

தனியார் கல்வி நிறுவனம் தீக்கிரை

எம். றொசாந்த்   / 2018 ஜூன் 14 , பி.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்று இனம் தெரியாத நபர்களால் தீக்கிரை ஆக்கப்பட்டு உள்ளது.

வட்டுக்கோட்டையில் உள்ள குறித்த கல்வி நிறுவனத்திற்குள் நேற்று (13)இரவு உட்புகுந்த குழு ஒன்று தளபாடங்கள் மற்றும் கொட்டகைகள் என்பவற்றுக்கு தீயிட்டு கொளுத்தி உள்ளனர்.

குறித்த கல்வி நிறுவனத்தில் கற்பித்த ஆசிரியர் ஒருவர் பதின்ம வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார் எனும் சந்தேகத்தில் நேற்று (13) மாலை வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இருந்தார்.

அந்நிலையில் இரவு குறித்த ஆசிரியர் கற்பித்த தனியார் கல்வி நிறுவனம் தீக்கிரையாக்கப்பட்டு உள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் கல்வி நிறுவனத்தின் இயக்குனர் வட்டுகோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X