2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

தனியார் போக்குவரத்து சேவைகளுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கி வைப்பு

Editorial   / 2018 ஜூன் 14 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

வடக்கு மாகாண தனியார் போக்குவரத்துச் சேவைகளுக்கான நிரந்தர வழி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு யாழிலுள்ள விருந்தினர் விடுதியில் இன்று (14) நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்த வடமாகாண முதலமைச்சரும் போக்குவரத்து அமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் நிரந்தர வழி அனுமதிப் பத்திரங்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் வடமாகாண போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர், போக்குவரத்து அதிகாரசபையின் உறுப்பினர்கள் போக்குவரத்துச் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பஸ் உரிமையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .