Niroshini / 2021 ஜூன் 09 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
சாவகச்சேரி - கச்சாய் பகுதியில், நேற்று (08), இராணுவத்தினரின் சுற்றிவளைப்பில் இருந்து, தப்பிச் செல்ல முற்பட்ட மணல் கொள்ளையர்களின் உழவு இயந்திரம் ஒன்று விபத்துக்குள்ளானது.
இந்தச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
கச்சாய் பகுதியில், கும்பலொன்று மணல் கொள்ளையில் ஈடுபடுவதாக இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இராணுவத்தினர் அப்பகுதிக்கு விரைந்து கொள்ளையர்களை சுற்றி வளைத்து கைது செய்ய முயன்றனர்.
இதன்போது இராணுவத்தினரை கண்ட மணல் கொள்ளையர்கள், உழவு இயந்திரத்துடன் தப்பிச்செல்ல முற்பட்ட போது, உழவு இயந்திரத்தின் முன் சக்கரம் உடைந்து விபத்துக்குள்ளானது.
இதையடுத்து, ஒருவர் இராணுவத்தினரிடம் சிக்கிக்கொண்டதுடன், ஏனையவர்கள் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.
சிக்கிக்கொண்டவரை கைது செய்த இராணுவத்தினர், அவரை சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அத்துடன், விபத்துக்குள்ளான உழவு இயந்திரத்தையும் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில், சாவகச்சேரி பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
2 hours ago
23 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
23 Dec 2025