2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

தமிழக மீனவர்கள் கைது

Freelancer   / 2022 ஒக்டோபர் 27 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். றொசாந்த்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஏழு தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றைய தினம் (27) சட்டவிரோதமாக படகொன்றில்  நுழைந்து 7 தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போதே, அப்பகுதியில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டி கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X