Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2017 ஒக்டோபர் 29 , பி.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
“கள் சீவுவதற்காக விதிக்கப்படவுள்ள தடை அமுலுக்கு வந்தால், வடக்கில் சீவல் தொழிலை தமது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள், தமது வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும்” என, பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் வலிகாமம் கொத்தணியின் தலைவர் எஸ் செல்வராசா தெரிவித்துள்ளார்.
கித்துள் மரம் தவிர்ந்த பனை மற்றும் தென்னை மரம் உள்ளிட்ட ஏனைய மரங்களில் இருந்து கள் சீவவோ, இறக்கவோ முடியாது என, புதிய மதுவரித் திருத்தச் சட்டமூலத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பிலான அறிவித்தல், கடந்த 20ஆம் திகதி வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“குறித்த சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டால், எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சட்டம், நடைமுறைக்கு வரும். அதனால், வடக்கு - கிழக்கு மக்கள், பெரும் பாதிப்புக்கு உள்ளாகுவார்கள்.
“கித்துள் மரம், சிங்கள மக்கள் வாழும் பிரதேசங்களில் மாத்திரமே உள்ளன. வடக்கு, கிழக்கில் பனை தென்னை மரங்களே உள்ளன. இந்நிலையில், பனை, தென்னை மரங்களில் கள் சீவுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டால், அது முற்றாக, தமிழ் மக்களையே பாதிக்கும். எனவே, இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனத்தில் எடுத்து, குறித்த சட்டத்திருத்தத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
2 hours ago