2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

‘தமிழர்கள் தனித்துவிடப்பட்டுள்ளனர்’

Editorial   / 2020 ஜூன் 16 , பி.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

தமிழர்களின் ஏக பிரதிநிதித்துவம் எனச் சொல்லி, தாம் மட்டும் பிரிந்து நிற்காமல், மக்களையும் சேர்த்து பிரித்தாள்கிறார்களெனச் சாடிய தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி, இதனால் தமிழர்கள் பிரதிநிதித்துவமின்றி தனித்துவிடப்பட்டுள்ளார்களெனவும் கூறினார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழர் விடுதலை கூட்டணியின் அலுவலகத்தில், இன்று (16) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கான கட்சியின் யாழ். தேர்தல் தொகுதி வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், எவரிடமும் ஒற்றுமை இல்லையெனவும் தங்கள் தலைவர்களின் இலட்சிய பாதையில் பயணிப்பதே தமது இலக்கெனவும் கூறினார்.

வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனை தமது கட்சியில் இணைய வருமாறு கேட்ட போது, அவர் வரவில்லையெனத் தெரிவித்த ஆனந்தசங்கரி, இன்று தேவையற்ற பலரை இணைத்து, விக்னேஸ்வரன் கட்சியொன்றை ஆரம்பித்துள்ளதாகவும் கூறினார்.

“எமது கொள்கையுடன் இணைந்து பயணிப்போர் எம்முடன் இணைந்து பயணியுங்கள்” எனவும், அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X