Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜனவரி 07 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
தமிழினம் திட்டமிடப்பட்டு சகல வழிகளிலும் கலாசார ரீதியாகவும் அடக்கப்பட்டு வருகின்றது. எனவே, அதனை உணர்ந்து பெற்றோர் சிறுவர்களை வளர்ப்பதில் கூடிய அக்கறையெடுத்து செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்காந்தராசா தெரிவித்தார்.
மருத்துவர் எஸ்.சிவதாஸ் எழுதிய 'சிறுவர்களுடன்' என்ற சிறுவர் உளநலம் தொடர்பான நூல் அறிமுக விழா வியாழக்கிழமை (07) புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு பிரதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்காலத்தில் எமது இனத்தின் பெருமைகளை பேணக்கூடிய வகையில் சிறுவர்களை சிறப்பாக வளர்க்க வேண்டியது பெற்றோர் அனைவரதும் பொறுப்பு. சிறுவர்களை ஒழுக்கம் மிக்க சமுதாயமாக கட்டியெழுப்ப வேண்டியதும் பெற்றோரின் கடமையாகும் என்றார்.
இந்நிகழ்வில் வட மாகாணசபை சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் யாழ் பல்கலைக்கழக உளவியல் துறையின் சிரேஸ்ட விரிவரையாளர் கலாநிதி க.கஜவிந்தன் மற்றும் துணுக்காய் பிரதேச செயலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் ஒளிரும் வாழ்வு அமைப்பினரால் மாற்றுத்திறனாளிகளின் பிள்ளைகளிற்கு கற்றல் உபகரணங்களும் வழற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago