Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஜூலை 04 , மு.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
'யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில் தற்போது நிலவும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை வெகு விரைவில் நிவர்த்தி செய்யப்படும்' என்று யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்ஜீவ தர்மரட்ண, தமிழ்மிரருக்கு ஞாயிற்றுக்கிழமை (03) தெரிவித்தார்.
அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
'கடந்த மாதம் மாவட்டத்தின் புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபராகக் கடமையேற்ற பின்னர், தற்போது அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் விஜயம் மேற்கொண்டு வருகிறேன். மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்கள் பெரும்பாலானவற்றில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை தொடர்பிலான குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்கின்றோம்.
கடந்த 30 வருட காலமாக இடம்பெற்ற யுத்தம் காரணமாக, பொலிஸ் சேவைக்குத் தமிழ் இளைஞர், யுவதிகளை இணைத்துக்கொள்ள முடியாமல் இருந்தது. தற்போது நாட்டில் சுபீட்சமான புதிய வாழ்வு அனைவருக்கும் கிடைத்துள்ளதால், தமிழ் இளைஞர், யுவதிகளை பொலிஸ் சேவைக்கு இணைத்துக்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன' என்று கூறினார்.
'தமிழ் இளைஞர் மற்றும் யுவதிகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற 900 விண்ணப்பங்கள் மூலம், பொலிஸ் உத்தியோகத்தர்கள் புதிதாகத் தெரிவு செய்யப்படவுள்ளனர். மேலும் அதிக பொலிஸ் ஆளணி உள்ள பொலிஸ் நிலையங்களில் உள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களை, குறைந்த ஆளணி உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிராந்தியங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்குப் பணிப்புரை வழங்கியுள்ளேன்' என்றும் அவர் குறிப்பிட்டார்.
'குறிப்பாக காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் அதிகளவான பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. அவர்களில் ஒரு சிலரை நெல்லியடி, அச்சுவேலி, வட்டுக்கோட்டை, வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையங்களுக்கு மாற்றுவதற்கு முதற்கட்டமாக நடவடிக்கை எடுத்துள்ளேன். ஆளணி குறைந்த பொலிஸ் நிலையங்கள் சிலவற்றில் வினைத்திறனான சேவைகள் இடம்பெற்று வருவது பாராட்டத்தக்கது' என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், 'பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் ஆலோசனைக்கமைய பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் நட்புறவை மேம்படுத்துவதற்குரிய வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக சிவில் சமூகங்களுக்கிடையில் வலுவான பொறிமுறை மேற்கொள்ளப்படுகின்றது. அவற்றின் மூலம் ஒவ்வொரு கிராமத்துக்கு ஒவ்வொரு பொலிஸ் உத்தியோகத்தர் நியமிக்கப்படுவார். அப் பொலிஸ் உத்தியோகத்தர் ஊடாக கிராமத்தில் இடம்பெறும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவற்கு இப்பொறிமுறை உறுதுணையாக இருக்கும்' எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
41 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
54 minute ago