2025 மே 05, திங்கட்கிழமை

தயார் நிலையில் உள்ள புதிய விடுதிகள்

Niroshini   / 2021 மே 13 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட புதிய விடுதிகள், சிகிச்சை வழங்குவதற்குதயார் நிலையில் உள்ளன.

நாட்டில் தீவிரமாக பரவி வரும்கொரோனா  தொற்று நிலைமையின் காரணமாக மாவட்டங்கள் தோறும் தொற்றுக்குள்ளாவோருக்கு சிகிச்சை வழங்கக் கூடியவாறான ஏற்பாடுகள், மாகாண சுகாதார பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், சத்திர சிகிச்சை, அதி தீவிர சிகிச்சை, ஒக்சிஜன் தேவைப்படுவோருக்கு  சிகிச்சை வழங்கவும்; தொற்றுக்குள்ளான கர்ப்பிணிகளுக்கு விசேட சிகிச்சை வழங்கவும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரண்டு விடுதிகள் அமைக்கப்பட்டன.

இவ்விரு விடுதிகளும், தற்போது,  கொரோனா சிகிச்சைக்கென தயார் நிலையில் உள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X