2025 மே 13, செவ்வாய்க்கிழமை

’தரமான மாடுகளை மட்டும் இறக்குமதி செய்யவும்’

Editorial   / 2020 ஜூன் 03 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

 

இனிவரும் காலங்களில், நோய்த்தொற்றில்லாது தரமான மாடுகளையும் நல்ல பால் உற்பத்தியை தரக்கூடிய மாடுகளை மட்டுமே, அரசாங்கம் இறக்குமதி செய்ய வேண்டுமென, அகில இலங்கை அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்க உப செயலாளரும் மருதங்கேணி கால்நடை வைத்திய அதிகாரியுமான ச.சுகிர்தன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில், இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், கடந்தமுறை அரசாங்கம் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக அரசாங்கத்தால் இறக்குமதி செய்யப்பட்ட பால் மாடுகள் சிறந்தவையாக இல்லையென்றும் அவை சில நோய்களை இலங்கைக்குக் கொண்டுவந்தன எனவும் இதனால், அந்தத் திட்டம் செயலிழந்து காணப்படுகிறதெனவும் கூறினார்.

“அந்த விடயங்கள் தொடர்பாக அரசாங்கத்திடம் எழுத்து மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இறக்குமதி செய்யப்படும் மாடுகள் அவ்வாறு இல்லாது தரமானதாகவும் நோய் இல்லாத மாடுகளையும் நல்ல பால் உற்பத்தியைத் தரக்கூடியதாகவும் இருக்க வேண்டும்” என சுகிர்தன் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X