Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 10 , பி.ப. 01:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
நல்லூர் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தரம் பிரிக்கப்படாது கழிவு காணப்பட்டாலோ அல்லது திண்மக்கழிவகற்றலின் புதிய நடைமுறைகளைப் பின்பற்றி செயற்பட தவறினாலோ, அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென, நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் தா.தியாகமூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், சபையின் குப்பைச் சேகரிப்பு வாகனங்கள், விசேட ஒலியை எழுப்பி குப்பைச் சேகரிக்க வருமெனவும், இந்நேரத்தில், வீட்டுக் குப்பைகளை வகைப்படுத்தி, தனித்தனியாகப் பொதிசெய்து, பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தினார்.
குப்பைச் சேகரிக்க வரும் வாகனங்களிடம் குப்பைகளை ஒப்படைக்கத் தவறுவோர், வீட்டு வாசலில், குப்பைகளைப் பாதுகாப்பாக வைக்குமாறுக் கேட்டுக்கொண்ட அவர், தரம் பிரிக்கப்படாது கழிவு காணப்பட்டால், அவற்றை பொறுப்பேற்கமாட்டோம் என்பதுடன், சம்பந்தப்பட்டோரிடம் அதற்கென அபராதமும் அறவிடப்படுமெனவும் கூறினார்.
அதேபோல், வாழைக்குற்றிகள், தென்னோலைகள், மரக்கொப்புகள், மரக்குற்றிகள், கட்டுமாணக் கழிவுகள், விலங்குக் கழிவுகள், மனிதச் சுகாதாரக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள் போன்றவற்றை வீதியில் கொட்டவோ, பொதி செய்து வைக்கவோ வேண்டாமெனவும், தவிசாளர் அறிவுறுத்தியுள்ளார்.
அவ்வாறு வைக்கப்படும் கழிவுகள் பிரதேச சபையால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாதெனவும் அவற்றைச் சூழலில் வைப்போர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், அவர் எச்சரிக்கை விடுத்தார்.
இதேவேளை, வியாபார நிலையங்கள், அர சநிறுவனங்கள், தனியார் விடுதிகள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றில் உள்ள கழிவுகளை, கட்டணம் செலுத்தினால் மாத்திரமே பொறுப்பேற்றக்கப்படுமெனவும், தவிசாளர் கூறினார்.
அத்துடன், தங்கள் வீட்டு வளவுகளில், உக்கக் கூடிய கழிவுகளைப் புதைப்பதற்கானச் சேவையைச் சபையிடம் கோரும் பட்சத்தில், கட்டணத்துடன் உரிய சேவை செய்ய ஆவண வழங்கப்படுமெனவும், அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
1 hours ago