2025 மே 06, செவ்வாய்க்கிழமை

தவிசாளர் தெரிவு ஒத்திவைப்பு

Niroshini   / 2021 செப்டெம்பர் 02 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். நிதர்ஷன், என்.ராஜ், ஸ். தில்லைநாதன்

வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் தெரிவு கோரம் இல்லாததால், திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் தெரிவு அமர்வு, இன்று முற்பகல் 10 மணிக்கு நகர சபைக்குரிய மண்டபத்தில், வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம.பற்றிக் டிரஞ்சன் தலைமையில் நடைபெற்றது.

இன்றைய அமர்வு கடுமையான சுகாதார நடைமுறைகளுக்கு உட்பட்டு  நடத்தப்பட்டது. 

இதன் போது, சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் மூவரும் ஈபிடிபி உறுப்பினர்கள் இருவரும் என ஐவர் மட்டுமே அமர்வில் பங்கேற்றனர்.

அதனால் அமர்வு சுமார் 30 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், அமர்வு ஆரம்பிக்கப்பட்டதும் கோரம் காணாததால் திகதி குறிப்பிடப்படாமல், தவிசாளர் தெரிவு அமர்வு ஒத்திவைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X