Princiya Dixci / 2022 செப்டெம்பர் 19 , பி.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன்
வட மாகாணத்தில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான சிறப்புப் பயிற்சிகள், மருத்துவ நிர்வாக விசேட வைத்திய நிபுணர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கென விசேடமாக கடந்த வாரம் யாழ்ப்பாணத்துக்கு வந்த சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் சதாசிவம் சிறீதரனால் தமிழ்மொழி மூலமான பயிற்சிநெறி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக மருத்துவ நிர்வாக விசேட வைத்திய நிபுணர்களான டொக்டர் த.சத்தியமூர்த்தி, டொக்டர் த.வினோதன் மற்றும் டொக்டர் திலிப் லியனகே ஆகியோரால் தாதிய உத்தியோகத்தர்களுக்கான சிறப்பு வகுப்புகள் யாழ். போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்டன.
இந்தப் பயிற்சிநெறியை மருத்துவ நிர்வாக பயிலுனரான டொக்டர் த.காண்டீபன் ஒருங்கிணைத்ததுடன், வடக்கின் மூத்த மருத்துவ நிர்வாகிகளுள் ஒருவரான டொக்டர் சிறீ பவானந்தராஜா மேற்பார்வை செய்திருந்தார்.
தொடர்ந்தும் வடக்கின் சுகாதாரத்துறை உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்களுக்கான சிறப்பு வகுப்புகள் நடத்தப்படவுள்ளதாக தெரியவருகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .