Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 24 , பி.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.நிதர்ஷன்
தாய் இறந்த சோகத்தில் மகனும் உயிரிழந்தச் சம்பவமொன்று, யாழ்ப்பாணம், கச்சேரி பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் கச்சேரி பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் தவமலர் (71 வயது) மற்றும் அவரது மகனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையுமான (38 வயது) பாலசிங்கம பிரசன்னா ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
மேற்படி பெண்ணுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து, அவரது மகனான பாலசிங்கம் பிரசன்னா அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
எனினும் வைத்தியசாலையில் சிசிக்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டாரென, வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்ட அதிர்ச்சியடைந்த மகனுக்கும் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அவரும் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி ஒரு மணித்தியாலத்தில் அவரும் உயிரிழந்திருந்தார்.
பிரேத பரிசோதனைக்காக இருவரது சடலங்களும் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
41 minute ago
3 hours ago
29 Aug 2025
29 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
3 hours ago
29 Aug 2025
29 Aug 2025